Skip to main content
image  குறை நிவர்த்தி : + 044-4567 4567 (24x7)
TN Logo CM Photo
Minister Photo CMWSSB Logo

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்

.

உங்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி மற்றும் கட்டணத்தை ஒவ்வொரு முதலாம் அரை ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதத்திலும் , ஒவ்வொரு இரண்டாம் அரை ஆண்டில் அக்டோபர் முதல் மார்ச் மாதத்திலும் செலுத்தி மேல்வரியை தவிர்க்கவும்.

வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தும் வசூல் மையங்கள்

1 . * 15 பகுதி அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலக வசூல் மையங்கள் காலை 10.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை செயல்படும். பணிமனை அலுவலக வசூல் மையங்கள் காலை 8.30 மணி முதல் காலை 11.30 மணி வரை ( சனிக்கிழமைகள் உட்பட )செயல்படும். வசூல் காலங்களில் நுகர்வோர் மற்றும் வரி செலுத்துபவர்களின் வசதிக்காக நேரம் நீடிக்கப்படும்.
2 . காசோலை அல்லது வரைவோலையை உரிய பகுதி அலுவலகத்திற்கு தபால் மூலமாகவும் அனுப்பலாம். ரசீது தபால் மூலமாக அனுப்பப்படும். குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள் " cmwssb " என்ற பெயரில் காசோலை அல்லது வரைவோலை மூலமாக செலுத்தப்படலாம். காசோலை பணமாக மாறிய பிறகே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். காசோலையின் பின்புறம் நுகர்வோர் எண் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட வேண்டும்.

பகுதி மற்றும் பணிமனை அலுவலகங்கள்

தலைமை அலுவலகம் : எண் .1 பம்பிங் ஸ்டேசன் ரோடு , சிந்தாதிரிப்பேட்டை , சென்னை .2 தொலைபேசி . 28451300

 
எண் .8A கங்கை அம்மன் கோயில் தெரு, ஆலப்பாக்கம் , சென்னை - 600 116

குறிப்பு :

1. பணம் செலுத்தும்போது உங்கள் நுகர்வோர் அட்டையை காண்பிக்கவும்.

2. தலைமை அலுவலகம்/ அனைத்து பகுதி மற்றும் பணிமனை அலுவலகங்களில் முன்கூட்டியே பணம் செலுத்தலாம்.

3. ஒவ்வொரு மாதமும் 16 ஆம் தேதி முதல் மாத இறுதிக்குள் தலைமை அலுவலகம்/ அனைத்து பகுதி மற்றும் பணிமனை அலுவலகங்களில் மீட்டர் கட்டணங்களை செலுத்தலாம் .

4. குறுக்கு காசோலை அல்லது வரைவோலை(D.D) மூலம் வரி மற்றும் கட்டணங்களை செலுத்தலாம் .

5. பணமாக மாற்ற இயலாத ஒவ்வொரு காசோலையின் மதிப்பில் 1% அல்லது குறைந்தபட்சம் ரூ.700 அபராத கட்டணமாக சரக்கு மற்றும் சேவைக் கட்டணத்துடன் வசூலிக்கப்படும். இல்லாவிடில் மாற்றுமுறையாவணச் சட்டம் 1938 ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

6. கோரிக்கையின் பேரில் பகுதி அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

7. நுகர்வோர் அட்டை பெறாத நுகர்வோர்கள் அந்தந்த பகுதி அலுவலகத்திலிருந்து விலை இல்லாத முறையில் நுகர்வோர் அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.

8. தொழில்துறை நுகர்வோர் ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் .

9. நுகர்வோரது சொத்தின் ஆண்டு மதிப்பு குறித்த வழக்கு சென்னை பெருநகர மாநகராட்சியிலோ அல்லது நீதிமன்றத்திலோ நிலுவையில் இருப்பினும், அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியினால் சொத்தின் ஆண்டு மதிப்பு மறுமதிப்பீடு செய்யப்படும் வரை நுகர்வோர்கள் புதிய வரித் தொகையை நிலுவையில்லாமல் செலுத்த வேண்டும்.ஒருவேளை நுகர்வோரது சொத்தின் ஆண்டு மதிப்பு குறைந்தால், நுகர்வோர் செலுத்திய அதிகப்படியான தொகையானது அவர்களது கணக்கில் வரவு வைக்கப்பட்டு எதிர்வரும் காலங்களில் சரி செய்யப்படும்.

10. இப்போது , நகரத்தின் எந்தவொரு பகுதியிலும் வசிக்கும் நுகர்வோர் தங்கள் நிலுவைத் தொகையை தலைமை அலுவலகம் / அனைத்து பகுதி அலுவலகங்கள் / பணிமனை வசூல் மையங்களில் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .

11. வீட்டு பயன்பாடு மற்றும் வீட்டு பயன்பாடு அல்லாதவற்றுக்கு முறையே 1.10.97 முதல் 31.03.2003 வரையில் தொடர் வரியாக மாதத்திற்கு 1.5 % முதல் 2 % வரை மேல்வரி வசூலிக்கப்பட்டது. 01.04.2003 முதல் தொடர் வரியாக மாதத்திற்கு 1.25 % மேல்வரி வசூவலிக்கரப்பட்டு வருகிறது. இவ்வரி குறைந்தபட்சம் ரூ.5/- ஆக வசூலிக்கப்படுகிறது. எனவே, உரிய நேரத்தில் கட்டணம் செலுத்தி மேல்வரி செலுத்துவதைத் தவிர்க்கவும் .

12. குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியைச் செலுத்தி வருமான வரிச் சட்டம் , 1961 இன் பிரிவு 23 ( 6 ) இன் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம் .

13. சரியான நேரத்தில் பணம் செலுத்தாவிடில் குடிநீர்/கழிவுநீர் இணைப்பு துண்டிக்கப்படும் .

14. லாரி மூலம் குடிநீர் (மொபைல் நீர்) விநியோக கட்டணங்கள் ரொக்கம் மற்றும் வரைவோலை மூலம் மட்டுமே செலுத்தப்பட வேண்டும் . காசோலைக் கட்டணமாக செலுத்த இயலாது. கட்டணத்தை தலைமை அலுவலகம்/ அனைத்து பகுதி மற்றும் வசூல் மையங்கள் செயல்படும் பணிமனை அலுவலகங்களில் பணம் செலுத்தலாம்.

15. எங்கள் வலைத்தளத்தில் உள்நுழைவதன் மூலம் எந்தவொரு கிரெடிட் /டெபிட் கார்டு/நெட் பேங்கிங் மூலமாகவும் பணம் செலுத்தலாம் : https://cmwssb.tn.gov.in

16. மேலும் , தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பகுதி/ பணிமணை அலுவலகங்களில் கடன் / டெபிட் ( Visa / Master ) /பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம்/ PoS மூலமாகவும் வரி செலுத்துபவர்கள்/நுகர்வோர்களிடமிருந்து வரி மற்றும் கட்டணங்களை சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சேகரிக்கிறது .