



சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்

1. 28.7.2001 முதல்பொது, தனியார்பொறியாளர்கள், கட்டிடத்தொழிலாளர்கள்அனைவருக்கும் சென்னை குடிநீர் வாரிய பயிற்சி மையத்தில் வழக்கமான பயிற்சித்திட்டம் நடத்தப்படுகிறது.
2. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாறியதுடன் ஒருங்கிணைந்து ஒரு தகவல் மையம் 31.7.2001 தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாறிய தலைமையகத்தில் திறக்கப்பட்டது, மேலும் மழைநீர் சேகரிப்பு பற்றிய தகவல்மையம் 10.8.2001 முதல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாறிய தலைமையகத்தில் திறக்கப்பட்டது.
3.தமிழ்நாட்டின் பேரூராட்சிகள்/டவுன் பஞ்சாயத்துகளின் நகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் செயல் அலுவலர்களுக்காக 15.9.2001 அன்றுதி. நகர் சர்பிட்டி தியாகராயர் கலையரங்கத்தில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
4. 21.9.2001 அன்று CMDA மாநாட்டு மண்டபத்தில் கட்டிடம் கட்டுபவர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்களுக்கான மழைநீர் சேகரிப்பு குறித்த கலந்தாய்வு நடைபெற்றது
5. பள்ளி தாளாளர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட தமிழ்நாடு மாநிலத்தின் அனைத்துக் கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் கருத்தரங்கம் 15.12.2001 அன்று தி.நகர் சர்பிட்டி தியாகராயர் கலையரங்கத்தில் நடைபெற்றது.
6. மே 6-9, 2002 அன்று வாஷிங்டனில் நடைபெற்ற நீர் மன்றம் 2002 –இல் மழைநீர் சேகரிப்பு குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் விரிவுரை வழங்கினார்.
7. 11.06.2002 அன்று பொதிகை தொலைக்காட்சியில் தாகத்திற்கு தண்ணீர் என்ற நேரலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
விளக்கமாதிரிகள்
1. குடிசைகளில்: பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினரின் நலனுக்காக நொச்சிக்குப்பத்தில் சென்னை குடிநீர் வாரியம், நேரடி மழைநீர் சேகரிப்பு இணைப்பை நிறுவியது.
2. பள்ளிகளில்: சென்னை குடிநீர் வாரியம், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களை உள்ளடக்கிய நேரடி சேகரிப்பு, திறந்த கிணறு செறிவூட்ட, மற்றும் ஆழ்துளை செறிவூட்ட கிணறு முறைகள் உட்பட பல வகையான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறுவியது.
3. கல்லூரிகளில்: சென்னை குடிநீர் வாரியம் மாணவர்களுக்கான செயல் விளக்கமாதிரிகளாக நீர் செறிவூட்டும் குழி மற்றும் நீர் சேகரிப்பு கிணறுகளை நிறுவியது.
4. அரசாங்க கட்டிடங்கள்: தலைமை செயலக கட்டிடம் மற்றும் எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் நிலத்தடிநீர் நிலைகளை செறிவூட்டம் செய்வதற்காக கட்டப்பட்டுள்ளன.
5. கண்காட்சி: புதுதில்லியில் நடைபெற்ற இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியிலும், சென்னை இந்திய வர்த்தக கண்காட்சி வளாகத்தில் கன்சுமெக் கண்காட்சிலும், தீவுத்திடலில் உள்ள தொழில்துறை வர்த்தகக் கண்காட்சியிலும் மழைநீர் சேகரிப்பு மாதிரிகள் பங்கேற்று காட்சிப் படுத்தப்பட்டன.